டிவிஎஸ் ரோனின்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ரோனின் என்ற மோட்டார் சைக்கிளை இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள முதலாவது பிரீமியம் மோட்டார் சைக்கிள் இதுவாகும். பழங்கால மோட்டார் சைக்கிள் பாணியில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக், புதிய தலைமுறையினரையும் கவரும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள 225 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 20.4 பிஎஸ் பவரையும், 19.93 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இதில் ரெயின் மற்றும் அர்பன் ஆகிய ஏபிஎஸ் மோட்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர ஜிடிடி தொழில்நுட்பம், ஸ்மார்ட் புளூடூத் கனெக்ட், அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச், எல்இடி விளக்குகள், டி வடிவ பைலட்லாம்ப் உட்பட பல அம்சங்கள் இதில் உள்ளன. மேலும், டிவிஎஸ் ஸ்மார்ட் எக்சோனெக்ட் ஆப்சை இணைத்து நேவிகேஷன், மொபைல் அழைப்பு ஆகிய வசதிகளையும் பெறலாம்.

Related posts

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

ராகுல் 3 முறை சென்ற நிலையில் கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சாடல்