மூணாறு அருகே சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் தூவானம் நீர்வீழ்ச்சி: அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு

மூணாறு: மூணாறு அருகே, காந்தளூர் ஊராட்சியில் இரைச்சல் பாறை மற்றும் தூவானம் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த, கேரள அரசு ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளா-தமிழ்நாடு மாநில எல்லை கிராமமான மறையூர், காந்தளூர் பகுதியில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆனால், இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகளின் வருகை சீசன் நேரங்களில் மட்டுமே உள்ளது. இதனால், இப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கபட்டு வந்தது.

இவர்களின் கோரிக்கையை ஏற்று சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக இரைச்சல் பாறை மற்றும் தூவானம் நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த காந்தளூர் சுற்றுலா வளர்ச்சிக்கு அரசு ரூ.70 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. இதற்கு மாவட்ட மதிப்பீட்டுக் குழுவின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த காந்தளூர் ஊராட்சி செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். 12 மாத கால அளவிற்குள் திட்டம் தயார் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று சுற்றுலாத்துறை இயக்குனர் பி.பீ.நூஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். காந்தளூர் ஊராட்சியில் இரைச்சல் பாறை மற்றும் தூவானம் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை