தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கடந்த 18ம் தேதி வரலாறு காணாத மழை பெய்தது. கனமழையின் காரணமாக தென் மாவட்டங்களில் ஏற்றப்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் கனமழை காரணமாக மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு வெள்ளத்தால் பாதித்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கான விடுப்பட்ட அரையாண்டு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(ஜன.02) பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.03) முதல் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு