தூத்துக்குடியில் நாளை முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம்: நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம்


தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாளை முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தீப்பெட்டி பண்டல்கள் கையிருப்பு அதிகமாக உள்ளதால் மூலப் பொருள் வாங்கியோருக்கு பணம் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். தற்காலிக தீர்வு காணும் பொருட்டு உற்பத்தி நிறுத்தம் செய்வதென்று உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

Related posts

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்