டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈரான் அமைப்புகளுக்கு தொடர்பு என தகவல்.. ட்ரம்பிற்கு மாதம் ரூ.375 கோடி தேர்தல் நிதி வழங்கும் எலான் மஸ்க்!!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு தேர்தல் நிதியாக ஒவ்வொரு மாதமும் ரூ.375 கோடி நிதி வழங்க டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் முன்வந்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோபிடன் போட்டியிடுகிறார். ஜோபிடனை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களம் காண்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த ட்ரம்பை தாமஸ் மேத்யூ க்ரூப்ஸ் என்ற இளைஞர் சுட்டார். இச்சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு முழு ஆதரவு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த நிலையில், ட்ரம்பிற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பிஎஸ்சி நிறுவனத்திடம் ஒவ்வொரு மாதமும் 375.80 கோடி ரூபாய் நிதி வழங்க அவர் முன்வந்துள்ளார். இதனிடையே ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த சில அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பத்திற்கு பின் மாநாட்டிற்கு வந்த ட்ரம்பிற்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரமாக கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இந்த மாநாட்டிற்கு பின்னர் ஒகியோ மாகாணத்தின் சென்ட் உறுப்பினர் ஜே.டி.வன்செ துணை அதிபராக போட்டியிடுவார் என்றும் குடியரசு கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு