எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி

டெல்லி: நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக பேசிய ராகுல் காந்தி, அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி பாஜவை திணறடித்தார். ராகுலின் 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது. இதனுடைய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையில் 11 பகுதிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறை கூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது. மேலும் சபையில் இடம் பெறாத அம்பானி, அதானி பேசிய பகுதிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ராகுல் காந்தியின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி; தனது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது.

மோடி உலகில் வேண்டுமானால் உண்மையை மறைக்கலாம்; உண்மையான உலகில் உண்மையை மறைக்க முடியாது. மோடி அரசு எவ்வளவு விரும்புகிறதோ அவ்வளவையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக்கொள்ளட்டும். ஆனால் உண்மையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று கூறினார்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!