டிரையம்ப், ஸ்கிராம்ப்ளர் பைக்குகள்

டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள முதலாவது மோட்டார் சைக்கிள்கள் இவை. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 398 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 40 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 37.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

எல்இடி லைட்டுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், டூயல் சானல் ஏபிஎஸ், அசிஸ்ட் கிளட்ச், யுஎஸ்பி சி டைப் சார்ஜிங் போர்ட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வரும் 5 ம் தேதி இந்த பைக்குகள் சந்தைப்படுத்தப் படுகின்றன. அப்போது விலை விவரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Related posts

திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

பகுஜன் சமாஜ் கட்சி புகாரை ஏற்க மறுப்பு; விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் புதிய அனுமதி

அரசுப்பேருந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய 2 பேர் கைது