டிரையம்ப் நிறுவனம் ஸ்டிரீட் டிரிபிள் ஆர் மோட்டார் சைக்கிள்

டிரையம்ப் நிறுவனம் ஸ்டிரீட் டிரிபிள் ஆர் மோட்டார் சைக்கிள் விலையை ரூ.22,000 குறைத்து ரூ.9.95 லட்சம் எனவும், ஆர்ஸ் வேரியண்ட் விலையை ரூ.14,000 குறைத்து நிர்ணயம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், டிரையம்ப் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நிறுவன இணைய தளத்தில் விலை மாற்றம் ஆகிவிட்டது. விலையில் மாற்றம் இல்லை டிரையம்ப் ஸ்டீர் டிரிபில் 765 ஆர் ரூ.10,17,000, இதன் ஆர்எஸ் வேரியண்ட் ரூ.11,81,000 ஆக நீடிக்கிறது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட 2 மோட்டார் சைக்கிள்களிலும் 765 சிசி 3 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பெங்களூருக்கு மாற்றம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!