திரிணாமுல் அமைச்சருக்கு ஈடி சம்மன்

கொல்கத்தா: சட்ட விரோத பண மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மேற்கு வங்க அமைச்சருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அல்கெமிஸ்ட் குழுமம் தொடர்பான ரூ.1900 கோடி சட்ட விரோ பண மோசடி வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அருப் பிஸ்வாஸ்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால் விசாரணைக்கு ஆஜராவதற்கு தனக்கு கால அவகாசம் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு அருப் பிஸ்வாஸ் கடிதம் அனுப்பி இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி