திருச்சி சிறையில் விஜயபாஸ்கருடன் மாஜி அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

திருச்சி: ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், திருச்சி பரஞ்சோதி ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர் குழுவினரிடம், வழக்கின் நிலை குறித்து விவரம் கேட்டறிந்தனர்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு