திருச்சி அருகே கொடூரம்; டூவீலரில் லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்று வாலிபரை தாக்கி ஓரினச் சேர்க்கை

திருச்சி: திருச்சி அருகே லிப்ட் கொடுத்து டூவீலரில் அழைத்து சென்று வாலிபரை தாக்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ரவுடி கும்பலை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வினோத்(24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது நண்பரின் தம்பி கங்குலி(20, பெயர் மாற்றப்பட்டுள்ளது) சில வாரங்களுக்கு முன் விபத்தில் காயமடைந்து திருச்சி அடுத்த சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரம் அவரை பார்த்து விட்டு வினோத் தனியார் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் திருச்சி செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த வாலிபர் வினோத்திடம் நைசாக பேச்சு கொடுத்தார். தனது பெயரை வசந்த்(24) என அறிமுகப்படுத்தி கொண்ட அவர் எங்கு செல்ல வேண்டும் என வினோத்திடம் கேட்டார். அவர் திருச்சி செல்ல வேண்டும் என கூறியதால், தானும் அங்கு தான் செல்வதாக கூறி வினோத்தை டூவீலரில் ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி வந்தார். செல்லும் வழியில் தனது வீட்டுக்கு சென்று விட்டு திருச்சி செல்லலாம் எனக்கூறி இருங்களூர் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கு ஒரு வீட்டின் அறைக்குள் சென்றதும் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டார். அந்த அறையில் கஞ்சா, மதுபோதையில் இருந்த கவியரசன்(23), யுவராஜ்(22), ரவி போஸ்கோ(22) மற்றும் அய்யனார்(24) ஆகியோரை வசந்த் தனது நண்பர்கள் என அறிமுகம் செய்து வைத்தார்.பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வினோத்திடம் தங்களுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடும்படி கட்்டாயப்படுத்தி உள்ளனர். அவர் மறுக்கவே ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் ஆயுதங்களால் வினோத்தை தாக்கினர். தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்து சென்று 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.பின்னர் வினோத்தை அறைக்கு அழைத்து வந்து முட்டி போட வைத்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரிடம் சாதியை கேட்டு அதை கூறி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

மேலும் அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.1,100ஐ பறித்து கொண்டனர். தன்னை விட்டு விடும்படி அவர்களது காலில் விழுந்து வினோத் கெஞ்சி உள்ளார். இதையடுத்து அவரிடம் நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின்னர் வசந்த் தனது டூவீலரில் வினோத்தை அழைத்து கொண்டு திருச்சி மெயின் ரோட்டில் இறக்கி விட்டு தப்பி சென்றார். வினோத் அப்பகுதியில் உள்ள டீக்கடைக்காரரின் செல்போனை வாங்கி திருச்சி காவல் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார். மேலும் தான் காயம் அடைந்து உள்ளதால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாகவும் கூறி உள்ளார்.அதனை தொடர்ந்து எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் சமயபுரம் போலீசார் வினோத்திடம் புகார் மனு பெற்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.அதனை தொடர்ந்து குற்றவாளிகள் 5 பேரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ேசலை கட்ட வைத்து ரசிப்பு: வினோத்தின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நிற்க வைத்து சேலை மற்றும் நைட்டியை மாற்றி மாற்றி கட்ட வைத்து 5 பேரும் ரசித்துள்ளனர். அதன்பின் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதை அந்த கும்பல் செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாக்கெட் அடிக்கும் ஒரு வயதான முதியவரைவும் இந்த கும்பல் அழைத்து வந்து சரமாரியாக கத்தியால் தாக்கி உள்ளனர். கண்ணீர் விட்டு கதறும் அவரை கால்களால் எட்டி உதைக்கின்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் கதறிய முதியவரை கயிற்றால் கட்டி தலை கீழாக தொங்க விட்டு வயிற்றில் கால்களால் எட்டி உதைக்கின்றனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஞ்சா போதை தலைக்கேறியதும் இந்த கும்பல் அட்டகாசம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ரவுடி பாட்டில் மணியின் கூட்டாளிகள்: திருவெறும்பூர் கணபதி நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(எ) பாட்டில் மணி(30). இவர் மீது 5 கொலை வழக்கு உள்பட 23 வழக்குகள் உள்ளது. புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதா எழிலரசி கூட்டத்தை சேர்ந்தவன். ஓரின சேர்க்கையில் கைதான இந்த 5 பேரும் பாட்டில் மணியின் கூட்டாளிகளாவர். நான் திருந்தி வாழ்கிறேன். எந்த ஒரு தவறும் செய்யவில்லை. ஆனால் தன்னை போலீசார் என்கவுன்டர் செய்யப்போவதாக குடியரசு தலைவருக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பி இருந்தவர் பாட்டில் மணி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குழப்பம் ஏற்படுத்தும் கருத்தை பேசிய நிர்வாகி மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார்: ஆ.ராசா எம்பி பேட்டி

உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காமல் தகராறு; குமரி அதிமுக நிர்வாகியை நிர்வாணமாக்கி தாக்கிய பெண்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நிரந்தரமாக நியமிக்க கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு