ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரக்கூடிய திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

திருச்சி : ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய 2வது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது,புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமருக்கு எடுத்துரைத்தார்.

திருச்சி புதிய முனையத்தின் சிறப்பு அம்சங்கள்

*60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டு புதிய விமான முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.

*திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரலாம்.

*புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தில் 750 கார்கள், 200 டாக்சிகள், 10 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.

*புறப்பாடு, வருகை என 16 வழிகள் உள்ளன; 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க நவீன கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

*4 நட்சத்திர புள்ளிகள் பெற்ற முதல் இந்திய விமானநிலைய முனையம் இதுவாகும்.

*புதிய முனையத்தில் கழிவுநீரை வெளியேற்றாமல் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

*பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநுட்பங்கள் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*உள்நாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 3 எக்ஸ்ரே இயந்திரங்கள், வௌிநாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட 4 எக்ஸ்ரே இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளது.

*பயணிகளின் உடைமைகளை விமானத்தில் இருந்து கொண்டு வரவும், விமானத்திற்கு கொண்டு செல்லவும் 6 கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

*பயணிகளின் குடியேற்ற சோதனைக்கு 58 கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்