திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை உடைத்து கொண்டு 50 அடியில் சீறி பாய்ந்த கார்; ஒரு நொடியில் பறிபோன கணவன், மனைவி உயிர்..!!

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்று பாலத்தை உடைத்து கார் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீரங்கம் – சமயபுரம் டோல்கேட் பகுதியை இணைக்கும் பழைய கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை கடக்கும் போது தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கார் ஒன்று இன்று காலை கீழே விழுந்துள்ளது. பாலத்தின் 19வது மதகு அருகே தடுப்புக்கட்டையை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் கார் கவிழ்ந்துள்ளது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் காரானது அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த கார் சென்னையை நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து காரை மீட்கும் முயற்சியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த கணவன், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காரில் உள்ள பொருட்களை ஆய்வு செய்து இந்த தம்பதி எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். காலையிலேயே ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு