திருச்சியில் டைடல் பூங்கா: கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு


சென்னை: திருச்சியில் 5.58 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரூ.315 கோடி மதிப்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா கட்டப்பட உள்ளது. 6 தளங்களுடன் அமைய உள்ள டைடல் பூங்காவை 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் கட்டப்பட உள்ள புதிய டைடல் பூங்கா மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

திருச்சி: திருச்சியில் ரூ. 600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் புதிய டைடல் பூங்கா அமைய உள்ளது. இதற்கான டெண்டரை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ரூ.600 கோடியில் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (எல்காட்) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) ஆகியவற்றுக்கு இடையேயான அரசுக்கு சொந்தமான இடங்களை டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பஞ்சப்பூரில் உள்ள 8.9 ஏக்கர் நிலத்தை திருச்சி மாநகராட்சி இறுதி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியிலேயே Tidel Park Limited நிர்வாகம் திருச்சி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியது.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பஞ்சப்பூரில் 10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த விருப்பம் தெரிவித்தது. சாத்தியமான இடங்களை பலமுறை ஆய்வு செய்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 8.9 ஏக்கர் நிலம் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு ஏற்றது என முடிவு செய்தது. நில பரிமாற்றத்திற்கு திருச்சி மாநகராட்சி ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் திருச்சியில் ரூபாய் 600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. அக்டோபர் 26ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 பேர் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் புதிய டைடல் பூங்கா அமைய உள்ளது. திருச்சியில் டைடல் பார்க் அமையும்போது, திருச்சியை சுற்றியுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் ஐ.டி துறையில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஐடி தொழில் பூங்காவால் திருச்சியில் ஐடி வளம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!

மீஞ்சூரில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் படத் திறப்புவிழா: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!