திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு: துரை வைகோ தகவல்

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை நேற்று பெரம்பலூர் எம்பி கே.என்.அருண் நேரு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்பி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்பி முரசொலி ஆகியோருடன் இணைந்து சென்று, நேரில் சந்தித்து திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக மனு அளித்தோம். அந்த மனுவில், ‘பிரதமர் மோடி திறந்து வைத்த திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தாலும், விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூரு, சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவையை பயன்படுத்துகின்றனர். எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். திருச்சியில் இருந்து டெல்லி மற்றும் கொச்சிக்கு நேரடி விமான சேவை தேவை எனவும் கோரிக்கை வைத்தோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை