திருச்சி தொகுதியா? அலறும் அதிமுக: தேமுதிகவுக்கு ஒதுக்க முடிவு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக இருகட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன. இதில், விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் வடசென்னை ஆகிய 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மக்களவை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் அந்த கட்சிக்கே ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கூட்டணி கட்சிக்கே திருச்சி தொகுதியை ஒதுக்குவதால் அதிமுக 2வது கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து திருச்சி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘திருச்சி தொகுதி திமுக கோட்டையாக உள்ளது. அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதால் வெற்றி பெறுவது கடினமாக உள்ளது. இதனால் தான் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொழிலதிபர்கள் போட்டியிட திடீர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் தான் வேறுவழியின்றி திருச்சி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விடலாம் என அதிமுக முடிவு செய்துள்ளது. கூட்டணி கட்சியில் எந்த கட்சி வேட்பாளர் போட்டியிட்டாலும் அவரது வெற்றிக்கு அனைவரும் பாடுபடுவோம்,’ என்றனர்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்