திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் 3 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் அவதி

சென்னை: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் 3 கி.மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற 10ம் தேதி திறக்கப்பட உள்ளதால் தென் மாவட்ட மக்கள் கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை நோக்கி வர தொடங்கிவிட்டனர்.

பெரும்பாலான மக்கள் கார், வேன், இருசக்கர வாகனங்கள் மூலம் பயணிப்பதால் அதிகளவு வாகனங்கள் சிங்கபெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்ட மக்கள் வரும் 10ம் தேதி முதல் தங்களது பிள்ளைககளை பள்ளிக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் தொடர்ந்து சென்னை நகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

அதிகளவு வாகனங்களின் வருகை காரணமாகவும் சிங்கப்பெருமாள் கோயில் ஒரகடம் சாலை ரயில்வே கேட் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கப்படுவதாலும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 3 கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related posts

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி

அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து