திருச்சியில் பஸ் நிலையம் அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை?

*நண்பர்களிடம் போலீஸ் விசாரணை

திருச்சி : திருச்சியில் பஸ் நிலையம் அருகே வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி கே.கே.நகர், எல்ஐசி காலனி, நேதாஜி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (41). செப்டிக்டேங் கழிவுகளை அப்புறப்படுத்தும் டேங்கர் லாரி வைத்து, கழிவுநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 9ம்தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்ற ரமேஷ், இரவு வரையிலும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ரமேஷ் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பெற்றோர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் கலையரங்கம் திருமண மண்டபம் எதிர்புறம் உள்ள ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில், ஒதுக்குப்புறமான பகுதியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் கென்னடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், மர்மமான முறையில் இறந்து கிடந்தது மாயமான ரமேஷ் என்பதும் அவரது தலையின் பின்பக்கம் பலத்த காயம் இருந்ததும் தெரிய வந்தது.

பின்னர், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கண்டோண்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து கல்லால் தாக்கியதில் ரமேஷ் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ரமேஷின் நண்பர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு