கலாச்சாரத்தின் மையமாக திகழ்கிறது திருச்சி.. விமான நிலைய முகப்பில் ஸ்ரீரங்கம் கோயில் கோபுர தோற்றம்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு!!

திருச்சி: இந்தியாவை சர்வதேச அரங்கில் பிரதமர் மோடி தலைநிமிர செய்திருப்பதாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், ஒன்றிய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். திருச்சி விமானநிலைய புதிய முனையம் ஒரே நேரத்தில் 3000த்திற்கும் மேற்பட்ட பயணிகளை கையாளும் திறன் கொண்டது. அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், திருச்சி விமான நிலைய முனையம் திறப்பு விழாவில் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது; விமான போக்குவரத்துத்துறையின் வளர்ச்சியின் மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவை சர்வதேச அரங்கில் பிரதமர் மோடி தலைநிமிர செய்திருக்கிறார். சாமானியர்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு. தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக திருச்சி விளங்குகிறது.

திருச்சி விமான நிலைய புதிய முனையம் அடுத்த 50 ஆண்டு காலத்துக்கு பயணிகள் தேவையை பூர்த்தி செய்யும். திருச்சி விமான நிலைய புதிய முனையம் அடுத்த 50 ஆண்டு காலத்துக்கு பயணிகள் தேவையை பூர்த்தி செய்யும். தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் திருச்சி விமான நிலைய முகப்பில் ஸ்ரீரங்கம் கோயில் கோபுர தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நாள்தோறும் 3000 விமானங்கள் இயக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது 23% அதிகரித்துள்ளது. என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது