விமானத்தில் பயணிப்பவர்கள் மட்டும் மனிதர்கள் அல்ல; வழியனுப்ப வருபவர்களும் மனிதர்கள்தான்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: விமானத்தில் பயணிப்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழியனுப்ப வருபவர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ரமதபுரம் மாவட்டத்தை கோவிந்தராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தில் பயணிகளை வழியனுப்ப மற்றும் வரவேற்க காத்திருக்கும் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை, உணவு வசதிகள் இல்லை என தெரிவித்து இருந்தார்.

மேலும், விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு பகுதிகளில் பயணிகள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அங்கும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை எனவும் இது தொடர்பாக விமானத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும், உரிய நடவடிக்கை இல்லை எனவும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

விமான நிலைய அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் விமானத்தில் பயணிக்க வில்லை, வழியனுபவதற்காகவே வந்தார் என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் பயணிப்பவர்கள் மட்டும் மனிதர்கள் அல்ல; வழியனுப்ப வருபவர்களும் மனிதர்கள்தான் எனவும் அவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்து தருவதே மனித நேயமாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கழிவறை அமைக்கும் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Related posts

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு