திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு; இயக்குநருக்கே செக்கிங்கா? தூக்கி அடிக்கப்பட்ட வீரர்: கடமையை செய்ததற்கு கிடைத்த பரிசு

திருச்சி: திருச்சி விமான நிலைய இயக்குநரை பாதுகாப்பு படை வீரர் சோதனை செய்து அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் விமான பயணிகள் வௌியே வரும் நுழைவாயில் வழியாக விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணி உள்ளே ெசல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், அவர் யார் என்பது தெரியாமல் அவருடைய அடையாள அட்டையை வாங்கி அங்குள்ள ஸ்கேனர் மூலம் சோதனை செய்து அதன்பின் உள்ளே அனுமதித்தார். இது விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், ‘இதுபோன்று ஏற்கனவே ஓரிரு முறை நடந்திருக்கிறது. புதிதாக பணிக்கு வரும் வீரர்களுக்கு மூத்த அதிகாரிகள் யார் என்பது குறித்து அறிமுகம் செய்து வைக்க வேண்டியது மத்திய தொழில்பாதுகாப்பு படையினரின் பணி. இந்த சம்பவம் தற்போது விமானிகள் வௌியே வரும் நுழைவாயிலில் நடைபெற்றது. தற்போது நடந்த சம்பவம் வேண்டுமென்றே நடந்ததா? அல்லது அவர் யார் என்பது தெரியாமல் நடந்ததா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தொழிற்பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த வீரரை வேறொரு பிரிவுக்கு மாற்றியதாக கூறுகின்றனர். ஆனால் விமான நிலைய இயக்குநர் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் சோதனை முடியும்வரை காத்திருந்து அதன்பின் தன்னுடைய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்’ என்றனர்.

Related posts

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81,652 குடும்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு

ஓசி சிகரெட் தராததால் டென்சன் கடையை சூறையாடிய ‘குடிமகன்கள்’

ஆந்திர சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 பேர் படுகாயம்