பழங்குடியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் பழங்குடியினர்கள் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இப்பணிகள் ஒரு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திரிசூலத்தில் பழங்குடியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெற்றிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டம், வட்டாரங்களிலும் பழங்குடியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகளில் இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது