பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 18ல் கலந்தாய்வு

சென்னை: பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 18ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்), நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மட்டும்) 18.6.2024 அன்று காலை 10 மணி அளவில் நடக்கிறது. அந்தந்த மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!