பழங்குடியின விவசாயிகளின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் கயல்விழி முன்னிலையில் கையெழுத்து

சென்னை: தமிழக அரசின் பழங்குடியினர் நல இயக்குனரகமும், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் – பெங்களூரு இணைந்து பழங்குடியின விவசாயிகளுக்கான நீடித்த நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அதன்படி, தோட்டக்கலை மற்றும் அதன் சார்ந்த மதிப்புகூட்ட தொழில் மேம்பாட்டுக்காக பழங்குடியின விவசாயிகளின் புதிய தோட்டக்கலை தொழில்நுட்பங்களை கொண்டு வந்து பழங்குடியினர் விவசாயிகளின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் துறை செயலாளர் லட்சுமி பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு