டிரெண்டிங்கில் கலக்கும் ‘Co-Ord’ !

ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் முதல், எங்கும் எதிலும் அதிகம் தென்படுகின்றன இந்த கோ-ஆர்டினேஷன் டிரெஸ். அதாவது பட்டம் மற்றும் டாப் இரண்டும் ஒரே டிசைன்களில் அமைந்த உடைகள். இதன் பூர்வீகம் எங்கே துவங்கியது, எப்படி அணியலாம், என்ன டிரெண்ட் விளக்குகிறார் நந்தா அமிர்தா (ஃபேஷன் டிசைனர் மற்றும் ஆய்வாளர்).

கோ- ஆர்ட் என்றால் என்ன ?

தளர்வான உடைகளாக, உடலும் உடையும் ஒன்றுக்கொன்று வசதியாக இருக்கும்படி உடுத்துவதுதான் இந்த கோ – ஆர்ட் உடைகள். அதாவது உடை உடலுடன் கோ-ஆர்டினேஷனுடன்(co-ordination) செயல்படும். ஒரு காலத்தில் இரவு நேரத்தில் ஸ்லீப்பிங் வேராக பயன்படுத்தப்பட்ட இந்த கோ – ஆர்ட் கான்செப்ட் தற்சமயம் சல்வார், கிராஃப் டாப் மற்றும் ஸ்கர்ட், கோட் சூட், அலுவலகத்திற்கான ஃபார்மல் உடைகள், கேஷுவல் உடைகள், பார்ட்டி வேர்கள், என அத்தனை வெரைட்டிகளிலும் இந்த கோ – ஆர்ட் ஃபேஷனைக் காண முடிகிறது. மேலும் மிகவும் தளர்வாக இந்த உடைகள் டிசைன் செய்யப்படுவதால் எந்த காலத்திலும் எந்த கால நிலையிலும் எப்படிப்பட்ட நிகழ்வுக்கும்கூட இந்த உடையை அணியலாம் காரணம் பிரைட், கலர்ஃபுல் மெட்டீரியல்களைக் கொண்டுதான் இந்த கோ- ஆர்ட் ஃபேஷன் உடைகள் உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும் பெரிய பெரிய டிசைன்கள் அல்லது பூக்கள், கலர்ஃபுல் பிரிண்ட்கள் உள்ளிட்ட டிசைன்கள் கொண்ட மெட்டீரியல்களில் தான் இந்த உடைகள் விற்பனைக்கு வரும் என்பதால் எந்த நிகழ்வுக்கும், சீசனுக்கும் இந்த உடைகள் பொருந்தும்.

எந்த வயதினர் அணியலாம்?

இந்த ஃபேஷனில் சிறப்பம்சமே எந்த வயதினரும் இந்த உடையை அணியலாம் என்பதுதான். பொதுவாக ஒரு ஸ்கர்ட் அல்லது கிராஃப் டாப் எனில் பொதுவாக 30 வயதிற்கு மேல் அதை அணிய முடியாது என்கிற நிலை இருக்கும் பட்சத்தில் ஒரே துணியில் இந்த மெட்டீரியல்களில் ஸ்கர்ட் மற்றும் கிராப் டாப் அணியும் பொழுது வயது மைனஸ் ஆக தெரியாது மேலும் இதை குழந்தைகள் அல்லது டீன் ஏஜ் பெண்கள் மட்டும்தான் அணிய வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும். யாருக்கும் பொருந்தும் விதமாக இந்த உடைகள் இருப்பது தான் இவற்றின் வசதியே. மேலும் உடலை இறுக்காத தளர்வான உடைகளாக இருப்பதும் வயதுக் கட்டுப்பாடுகள் இல்லாமைக்கு ஒரு காரணம். ஒல்லியோ, பருமனோ உடை தளார்வாக இருக்கும் பட்சத்தில் யாரும் அணியலாம். காரணம் உடலின் அதீத சதைப் பகுதிகள் அனைத்தும் கூட இந்த தளர்வான டிசைனில் மறைந்துவிடும்.

எப்படி டிசைன் செய்து கொள்ளலாம்? என்ன டிரெண்ட்?

‘கோ- ஆர்ட் உடைகள் டிசைனிங் என்றாலே டிசைனர்கள் பெரும்பாலும் உற்சாகமடைவார்கள். காரணம் மற்ற உடைகள் போல் இதில் ஜிப், சரியான அளவில் கட், ஷேப் இப்படி எதுவும் மெனெக்கெடாமல் ஒரு கிராண்ட் உடையை இந்த கோ – ஆர்ட் கான்செப்ட்டில் உருவாக்கலாம். மேலும் ஜம்ப்சூட் உள்ளிட்ட உடைகள் கூட கொஞ்சம் பருமனாக இருந்தாலும் சரியான அளவெடுத்து தைத்தால்தான் பொருந்தும். ஆனால் கோ- ஆர்ட் உடைகள் அப்படி இல்லை எப்படியும் எந்த வகையிலும்கூட டிசிஅன் செய்துகொள்ளலாம். ஆஃபீஸ் சந்திப்பு எனில் ஒரே டிசைனில் கோட், பாட்டம், அதனுடன் அடங்கிய மேட்சிங்கான இன்னர் ஸ்லிப் என மேட்ச் செய்தால் நீங்கள்தான் பாஸ் லேடி. அதே போல் ஒரு பார்ட்டி, நண்பர்கள் சந்திப்பு எனில் ஸ்கர்ட், டாப், சல்வார், காலருடன் கூடிய குர்தா பாட்டம், அல்லது பென்சிக் ஸ்கர்ட் மற்றும் டாப் என எப்படியும் அணியலாம். டேஞ்சர்ஃபீல்ட் (Dangerfield), லிட்டில் பார்ட்டி டிரெஸ் (Little party dress), விட்சரி (Witchery), மிஸ்டர் ஸிமி (Mister zimi ), ஸ்டைல் ஃபாஸ்ட் (Stylefast) உள்ளிட்ட வகைகளில் இந்த கோ-ஆர்ட் உடைகள் டிசைன் செய்யப்படுகின்றன. தற்சமயம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட ஆண்களும் கூட இந்த கோ-ஆர்ட் உடைகள் மேல் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். டிசிஅன் செய்வதும் சுலபம் என்கிறதாலேயே இந்த உடைகள் பாலிஸ்டர், காட்டன், ரேயான் என எல்லா மெட்டீரியல்களிலும் ரூ.400 துவங்கி முழு செட் உடைகளே ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் காண முடிகிறது. டிரெண்டி, கேஷுவல் லுக் மேலும் தனித்துவமான தோற்றம் கொடுக்க கோ – ஆர்ட் சிறந்த தேர்வு.
– ஷாலினி நியூட்டன்

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு