Sunday, September 8, 2024
Home » இவ்வளவு ட்ரெண்டிங்கா?

இவ்வளவு ட்ரெண்டிங்கா?

by Porselvi

பண்டிகை என்றதுமே முதல் வேலையே ஷாப்பிங் தானே. பொதுவாக விழாக்கால டிரெண்டுக்கு ஏற்றவாறு ஆடை அணிகளைத் தேர்வு செய்வதில் இந்தியா முழுமையுமாக ஒரு தனித்துவத்தைக் காணமுடிகிறது.இன்றைய தலைமுறையினர் ஏதோ ஒரு புத்தாடை என்கிற மாதிரி எல்லாம் உடைகளை தேர்வு செய்வது கிடையாது. ஒவ்வொரு சீசனுக்கு, கலாச்சாரம் சார்ந்த விழாக்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு, அலுவலக பார்ட்டிகளுக்கு, பெர்சனல் கொண்டாட்டங்களுக்கு என்று தனித்தனியாக ரசனையுடன் உடைகளைத் தேர்வுசெய்து அணிகின்றனர். கல்லூரிக்கு வெஸ்டர்ன் உடைகளில் செல்லும் பிள்ளைகள் பொங்கல் போன்ற விழாக்காலம் என்றால் நமது கலாச்சார உடைகளை அதிகம் அணிய விரும்புகின்றனர். இதனை கருத்தில்கொண்டே பல நவீன புடவை ரகங்கள், சல்வார்கள், லெஹங்காக்கள் என்று புதுவரவுகள் அதிகம் களைகட்டத் துவங்கிவிட்டது.

நித்யா ரஞ்சித்குமார் ஆன்லைன் பொட்டிக்

இப்ப பண்டிகை கால ட்ரெண்டிங் என்றாலே இன்டோ வெஸ்டர்ன் உடைகள்தான். அதிலும் ஒன் மினிட் சாரிஸ் தான் இளசுகளின் சாய்ஸ், கார்ட்டன், ஜார்ஜெட் , சில்க் என எல்லா மெட்டீரியல்களிலும் ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்கு. அதே மாதிரி சராரா , லாங் ஃப்ளேர் குர்திகள், லாங் ஃப்ளேர் கவுன்கள் எல்லாமே இப்ப நவீன ரக ட்ரெண்டிங். ப்யூர் சாப்ட் சில்க், காஞ்சி குப்படம் சாரிஸ், சில்க் கார்டன், மினி பார்ட்டர் சாரிஸ் தான் அதிகமாக போய்ட்டிருக்கு. செட்டி நாடு கார்டன், நாராயண பெட் கார்டன் எல்லாம் இப்ப பாஸ்ட் மூவிங்ல இருக்கு. ஆர்கென்சா சாரிஸ், இதில் குர்தி மற்றும் துப்பட்டாவும் நவீன ட்ரெண்ட். கிராப் டாப் வித் ஸ்கர்ட் போட் நெக் மாடல் , அதோடு புல் ஹாண்ட் மாடலும் இப்ப பேமஸ். கராரா செட், சாட்டின் மெட்டீரியல் லெஹங்கா அதனுடன் இணைந்த நெட் துப்பட்டாவும் , கிராப் டாப் உடன் லேயர் ஸ்கர்ட் அதீத ட்ரெண்டிங்.

கார்த்திகா வாசுதேவன்
கார்மெண்ட் பிஸினஸ்

பண்டிகை கால ட்ரண்டிங் உடையெனில் இளம் தலைமுறையினர் விலை உயர்ந்த புடவைகளை லாங் மேக்ஸிகளாகவும், லாங்க் ஸ்கர்ட்டுகளாகவும் உருமாற்றம் செய்து அணிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இது அவர்களுக்கு விழாக்கால கிராண்ட் லுக்கை தருகிறது.தற்போதைய டிரெண்டிங் என்றால் கொஞ்சம் ஸ்டைலும், ரசனையும் கலந்து சில மாற்றங்களைச் செய்த பாவாடை தாவணியை லெஹங்கா, சோலி என்று பாந்தமாக அணியத் தொடங்கி விட்டார்கள்.பெண்கள் நவீன ரக புடவைகள் மற்றும் அதிக எம்பிராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஜர்தோஷி, ஆரி, மிரர் சீக்வன்ஸ் வொர்க், சிக்கன் வொர்க், மீனாகாரி என்று பிரைடல் பிளவுஸ்கள் என கலக்கி வருகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் அளவுக்கு அவர்களுக்கு சாய்ஸ்கள் கிடைப்பதில்லை. பேண்ட் , டி ஷர்ட், ஜீன்ஸ், பார்மல்ஸ், ஸ்லாக்குகள் என்று கொஞ்சம் வெரைட்டிகள் தான்.

நித்யா கைலாசம்
ஆதிரா பொட்டிக்

இளம் பெண்களின் சாய்ஸ் விதவிதமான ப்ராக்ஸ் தான். அதுவும் இந்த பண்டிகை மற்றும் விழாக்கால ட்ரெண்டில் இருக்கக்கூடியது ஹைலோ மாடல்ஸ். அடுத்து எக்கச்சக்க வேலைப்பாடுகளுடன் கூடிய நெட்ஒர்க் சாரீஸ் நல்லா போகுது.குழந்தைகளுக்கு வித்தியாசமான கவுன், அடுத்து எப்பவும் போல வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டுப்பாவாடை சட்டை. அதிலும் கொஞ்சம் டிசைன் மாற்றிக் கொடுக்கும் போது நல்லாவே போகுது. பெண் குழந்தைகளுக்கு பெரியவங்க போல சேலை முந்தி போட்டு கட்டக் கூடிய ஆடைகள் எல்லாமே இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்டில் இருக்கு.

லாவண்யா
டிராமா ஆர்டிஸ்ட்

விசேஷ நாட்கள் வருகிறதேன்றாலே ஒரு மாதத்திற்கு முன்பாகவே டிரஸ்களை தேடித் தேடி வாங்க ஆரம்பித்து விடுவோம். நான் புடவையை விட ப்ளவுஸ்கள் மீது அதீத கவனம் செலுத்துவேன். ஆரி வொர்க் ப்ளவுஸ்கள் ரிச் லுக் தரும். புடவைதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஆடை.இம்முறை புதிய வரவாக டோலாசில்க், பட்டோலா பிரிண்ட், கோட்டா சேரி, சாப்ட் சில்க், பனாரசி சில்க், பைத்தனி கும் புடவைகள் ட்ரண்டாகி வருகின்றது. ப்ரிண்டட் காட்டன் புடவைகள், கலம்காரி, மதுரை ஆரணி பட்டு என கண்கவர் வகையில் நிறைய உடைகள் புதிய டிசைன்களில் வந்திருக்கிறது. ப்ளைன் சாரிகளும் கலம்காரி ப்ளவுஸ்களும் நவீன ட்ரெண்டில் பார்க்க முடிகிறது.

சிந்து
காஸ்ட்யூம்
டிசைனர்

எக்காலத்திலும் விழாக்காலம் எனில் புடவைகள்தான் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ். அதற்கு பாட் நெக் , போட் நெக் தைத்து போடுவது தான் தற்போதைய ஃபேஷன்ல இருக்கு. அதே மாதிரி பிரிண்டட் காட்டன் சாரிஸ் உடன் கலம்காரி பிளவுஸ் டிரெண்ட்.ட்ரடிஷனல் லுக் கொடுக்கற லாங் கவுன்ஸ், பெப்லூம் டாப்ஸ் , பென்சில் பேண்ட், கிராண்ட் லெஹங்கா, மல்டி கலர் லெஹங்கா , பிரிண்டட் லெஹங்கான்னு இப்ப நல்ல ட்ரண்டிங்கில் போய்ட்டிருக்கு. பளீர் நிற பலாசோக்களை அணிந்து பென்சில் டாப்ஸ் மற்றும் ஷாட் குர்த்தா அணிவது நவீன ட்ரெண்டிங்.ஆண்களை பொறுத்தவரை பிரின்டட் குர்தா, கார்டன் ஷாட் குர்தா, ப்ளைன் டைப் குர்தா இப்ப ஃபேஷன் ட்ரெண்ட்.

லதா சரவணன்
சாந்தி சாரீஸ்

விழாக்காலம் என்றாலே விதவிதமான உடைகள் தான் எல்லோரோட முதல் தேர்வும். பட்டுக்குப் பதிலா பனாரஸ் குர்தீஸ், காட்டன் மற்றும் சிந்தடிக் அவுட்லைன் ஹெவி டிசைன் சல்வார்ஸ், லெஹங்கா சோலி சாப்ட் சில்க் மெட்டீரீயல்ல லாங்கவுன் தான் இப்ப ட்ெரண்டிங்கில் பாஸ்ட் மூவிங் எனலாம்.இதை தவிர பார்ட்டி வேர் பஞ்சாபி டிரஸ், ஷேர்வானி வித் பேர் சேரீஸ், அனார்க்கலி ஹை நெக் லாங் பார்டர் சல்வார்ஸ், வெஸ்டன் டாப்ஸ் இதெல்லாமே நவீன யுவதிகளின் ஃபர்ஸ்ட் சாய்ஸ்.
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi