மரங்கள் வெட்டுவதை தடுத்த வனத்துறை அதிகாரிகளிடம் அத்துமீறிய பா.ஜ எம்எல்ஏ

பல்லியா: உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ்டிஹ் தொகுதி பா.ஜ எம்எல்ஏ கேடகி சிங். இவர் மீது பல்லியா மாவட்ட கலெக்டர் பிரவீன்குமாரிடம் வனத்துறை அதிகாரிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். பல்லியா மாவட்டம் மணியார் பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக பாஜ எம்.எல்.ஏ கேடகி சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வனத்துறை அலுவலகத்தில் புகுந்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வனத்துறை துணைப்பிரிவு அதிகாரி குமாரி ஊர்வசி கூறுகையில்,’ பா.ஜ எம்எல்ஏ கேடகி சிங்கின் தவறான நடத்தை குறித்து பல்லியா மாவட்ட எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது ’ என்று தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை கேடகி சிங் எம்எல்ஏ மறுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக உபி முதல்வருக்கு அறிக்கை அனுப்பி விட்டதாக கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு