சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை பல் டாக்டர் சிக்கினார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்தவர் அப்துல்மஜித் (36). பல் டாக்டர். திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள இவரது பல் மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தாயுடன் சிகிச்சைக்கு சென்றார். தாயை மெடிக்கல்லில் மருந்து வாங்கி வரும்படி அனுப்பிவிட்டு மாணவியிடம் டாக்டர் அப்துல் மஜித் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி வெளியில் ஓடிவந்து, தாயாரை போனில் அழைத்துள்ளார். அவர் வந்ததும், மருத்துவமனையில் நடந்ததை அழுது கொண்டே கூறியுள்ளார். இதையடுத்த புகாரின்படி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அப்துல் மஜித்தை நேற்று காலை கைது செய்தனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்