பசிபிக் பயண எழுத்தாளர்கள் சங்க விருது விழா: 2024 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு பட்வா சர்வதேச பயண விருது

பெர்லின்: பசிபிக் பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் பண்பாட்டு சுற்றுலா இலக்கிற்கான தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு பட்வா சர்வதேச பயண விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை மாமல்லபுரம் சிற்பங்களின் மீது ஈர்த்தார்கள். மேலும் பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கல்லூரி மற்றும் உயர்கல்வி பயிலும் 200 குழந்தைகளை ஆண்டுதோறும் தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் சுற்றுலா மேற்கொள்ளும் ”வேர்களைத் தேடி” திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள். பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, சீனா, மலேசியா.

ரஷ்யா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டிற்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். அவர்கள் தமிழ்நாட்டில் தங்கும் காலத்தை அதிகரிக்கவும் சுற்றுலாத் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக பாரம்பரியம் மற்றும் ஆன்மீக சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, சாகசச் சுற்றுலா.சுற்றுச்சூழல் மற்றும் வனச் சுற்றுலா, மருத்துவம் மற்றும் உடல்நலம் பேணும் (Medical அண்ட் Wellness) சுற்றுலா, வணிக (MICE) சுற்றுலா, கிராமிய மற்றும் மலை தோட்டப்பயிர் சுற்றுலா, கேரவன் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, உணவுச் சுற்றுலா என பத்து சுற்றுலாப் பிரிவுகளை அடையாளம் கண்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக உலகெங்கும் காட்சிப்படுத்துவதன் மூலம் தமிழகத்தை ‘நெடிய சுற்றுலாக்களைக் சிறந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவிலும், உலகெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய புதிய முயற்சிகளின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு ஆர்வத்துடன் வருகை தருவதுடன், இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கி பார்வையிட்டு வருகின்றார்கள்.

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 2024 மார்ச் 5 முதல் 7 வரை நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TRAVEL BOURSE-2024) தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகளை வீடியோ குறும்படங்கள் மூலமாகவும், கையேடுகள், மடிப்பேடுகள் மூலமாகவும் விளக்கப்பட்டு, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ள பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டார்கள். மேலும் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் பார்வையாளர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இத்தகைய சிறப்பான முன்னெடுப்பு நடவடிக்கைகளால் ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டு சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருதினை ஜமைக்கா நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர்.ஹெச்.இ.எட்மண்ட் பார்ட்லெட் (Mr.H.E.EDMUND BARTLETT, Minister of Tourism, Jamaica) அவர்களிடமிருந்து, தமிழ்நாடு அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். க.மணிவாசன் இ.ஆ.ப., பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பட்வா குழுவின் பொதுச்செயலாளர்.யாதன் அலுவாலியா (Mr.YATAN AHLUWALIA, Secretary General, THE PATWA TEAM), மற்றும் பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமக்கள், சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related posts

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!