போக்குவரத்து துறைக்கு செப்டம்பரில் ஆட்கள் தேர்வு: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில் புதிய பஸ்களை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: . தற்போது 685 பேர் பணிக்கு புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட பிறகு அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டவர்கள் விலக்கப்பட்டார்கள். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் அந்த பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும்.

கலைஞர் கொடுத்த பென்ஷன், டிஏவை நிறுத்தியது அதிமுக எடப்பாடி ஆட்சி. அவர்களே நிறுத்தி விட்டு போனதை தற்போது அவர்களே கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இடைப்பட்ட காலத்திற்கு மொத்தமாக கொடுக்க வேண்டுமா, இல்லையா என்பதை நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் வழக்கு இருக்கிறது. பென்ஷன், டிஏ வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நவ. 2வது வாரத்தில் பேரவை தேர்தல்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கணிப்பு

மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

மாணவர்களின் திறன் வளர்க்கும் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்