போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் சிஐடியு வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8 போக்குவரத்து கழக தலைமையகங்கள் முன் சிஐடியு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பகுதியாக சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் அஞ்சலி செலுத்திய அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க சிஐடியு நிர்வாகிகள், சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் இருந்து பேரணியாக சென்று பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரை சந்தித்தனர். அவரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர். தொடர்ந்து பல்லவன் சாலையில் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நிர்வாகிகள் பேசியதாவது: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு செப்.1ம் தேதி முதல் 15-வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றனர்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்