போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. போக்குவாத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தையை அரசு நடத்தி வருகிறது. குறிப்பாக 5 முறை இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு பற்றி பேச 14 பேர் கொண்ட குழுவை போக்குவரத்து ஆணையம் தரப்பில் அமைக்கபட்ட சூழலில் தொழிற்சங்கத்தினரும் வரவேற்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனை அடுத்து இந்த பேச்சுவார்த்தை என்பது நடத்த முடியாமல் போன சூழலில் தற்போது மீண்டும் இந்த பேச்சுவார்த்தை என்பது தேனாம்பேடையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அனைத்து போக்குவரத்து மேலான் இயக்குனர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு