திருநங்கை கொலை வழக்கு 2 இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரன்ட்: குற்றவாளிகளுடன் சேர்த்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், சத்தியா, பாலு, விஜய், செல்வகுமார் ஆகியோர் 2017ம் ஆண்டு 18 வயதுள்ள ஒரு திருநங்கையை தனியே அழைத்துச்சென்று மது வாங்கி கொடுத்து இவர்களும் குடித்துள்ளனர். பிறகு திடீரென நடந்த தகராறில் அவரை கொலை செய்தனர். இது தொடர்பாக பெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி செம்மல் விசாரித்து வந்தார். கொலை செய்யப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவர். மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கு வெறும் கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே நீதிபதி செம்மல் இந்த வழக்கை போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளை சேர்த்து போக்சோ நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கை சரிவர கையாளாத பெரும்புதூர் இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜனை 7வது குற்றவாளியாகவும், மற்றொரு இன்ஸ்பெக்டர் விநாயகத்தை 8வது குற்றவாளியாகவும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டார். மேலும். 2 இன்ஸ்பெக்டர்களையும் கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்