அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு யூடியூபர் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு யூடியூபர் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூடியூபில் பரப்பியதாக ஐகோர்ட்டில் அப்சரா ரெட்டி நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று அப்சரா ரெட்டி புகார் தெரிவித்திருந்தார். அப்சரா ரெட்டிக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கிவிட்டது.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!