15 கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: பள்ளிக்கல்வி துறை செயலாளர் மதுமதி உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் துறை சார்ந்த 5 துணை இயக்குனர்கள் மற்றும் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் என மொத்தம் 15 பேரை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி சென்னைக்கும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா மதுரைக்கும், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி திருப்பத்தூருக்கும், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா திண்டுக்கல்லுக்கும், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் தொடக்க கல்வி துணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள் பெரம்பலூருக்கும், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குனராகவும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் கரூருக்கும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் விருதுநகருக்கும், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர தனியார் பள்ளிகள் துணை இயக்குனர் சின்னராஜூ ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குனர் சரஸ்வதி ராணிப் பேட்டைமாவட்ட முத ன்மை கல்வி அலுவலராகவும், தொடக்க கல்வி துணை இயக்குனர் சுப்பாராவ் ஈரோடு மாவ ட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனர் அண்ணாதுரை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குனர் முத்துசாமி பள்ளிக்கல்வி துணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்