முதுகில் குத்திட்டோமா? துரோகி நன்றி மறந்து பேசாத… வரப்போற தேர்தல்ல எப்படி குத்தப்போறோம் நீ பாரு..ஏ.சி.சண்முகத்தை ஒருமையில் விளாசிய வீரமணி

வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது: கடந்த முறை நம்மோடு கூட்டணியில் இருந்தவர், இன்று எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் அதிமுகவினர் துரோகம் செய்து விட்டனர். அதனால் நான் தோல்வி அடைந்தேன் எனக்கூறுகிறார். இடைத்தேர்தலில் 33 அமைச்சர், முதல்வர் என தொகுதியில் பிரசாரம் செய்ய வந்தனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் 2 அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு பணம் பற்றாக்குறை, என்னால் நிக்க முடியாது என்று சொன்னார். என்னால் செலவு செய்ய முடியாது என்றும் சொன்னார். எப்படிப்பட்ட வேட்பாளர் பார்த்துக்குங்க. நான்தான் யோக்கியன் என பேசி மக்களை ஏமாற்றி, இப்ப ஆளே காணோம். கடைசியில தேர்தல் வருகிறதால, 3, 4 மாசமாக மருத்துவ முகாம், சேவை பண்றேன், மக்களோடு இருக்கிறேன் என்று ஏமாத்திக்கிட்டு இருக்கார்.

‘பணமில்லை எனக்கு வேண்டாம் சீட்’ என சொன்னார். எடப்பாடியார் கூப்பிட்டு, ஐயா நீ நில்லு, எல்லாம் மாவட்ட செயலாளர் வீரமணி பார்த்துப்பார், அவருக்கு எப்படி, என்ன பண்ணா ஜெயிக்கணும்னு தெரியும்னு’ சொன்னார். மைக் இருக்கிறதால என்ன பேச முடியல. அதிமுகவினர் முதுகில் குத்திவிட்டாங்க என சொல்கிறார். வரப்போற தேர்தல்ல எப்படி குத்தப்போறோம் நீ பாரு. நீ சமூதாயத்தை முன்னிறுத்தி ஓட்டு வாங்கி போயிட்டு, அமைச்சராகி அங்க உட்கார்ந்து, மருத்துவக்கல்லூரி வாங்க பார்க்கிறாயா, நன்றி மறந்து விட்டு பேசுகிறார். உயிரை கொடுத்து வேலை செய்தோம்.

நீ பப்ளிக் கூட்டத்தில் பேசுகிறாய், உனக்கு அசிங்கமா இல்ல, உனக்கு நன்றி இருக்குமா, நீ துரோகி இல்லயா, இரட்டை இலைக்கு துரோகம் பண்ற. இந்த இரட்டை இலையினால்தான் உன்னை உலகத்துக்கே தெரியும். புரட்சி தலைவர் எம்ஜிஆரை ஏமாற்றி நீ சம்பாதிச்ச, யாரைப் பார்த்து முதுகில் குத்தி விட்டாய் என்கிறாய்? நீ தான் துரோகி, நன்றி மறந்து பேசுகிறாய் உன்னுடைய பாச்சா பலிக்காது வேஷம் கலையும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு