தஞ்சை அருகே ஏரியில் பயிற்சி விமானம் விழுந்ததா? வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலை

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் நீலாறு ஏரியில் நேற்று பலத்த சத்தத்தோடு பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறை, வருவாய் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதில் விமானம் விழுந்து நொறுங்கியதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. வதந்தியை கிளப்பியது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே குலமங்கலம் வயல்காட்டில் விழுந்து நொறுங்கி எரிந்த நிலையில் இருப்பது போல் ஒரு படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை ஆய்வு செய்த போலீசார், இது வடமாநிலத்தில் முன்பு நடந்த விமான விபத்து புகைப்படம் என்பது தெரியவந்தது. எனவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் படம் வெளியிட்ட நபரை போலீசார் உடனடியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை