தனியார் தொழிற்சாலையில் பணியிட பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் தனியார் தொழிற்சாலையில் பணியிட பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் எஸ்.குமார் தலைமை வகித்தார். பணியிட பாதுகாப்பின் முக்கியத்துவம், தொழிற்சாலையில் விபத்தில்லா சூழலை உருவாக்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் (பயிற்சி) பிரேமகுமாரி பணியிட பாதுகாப்பு, எலக்ட்ரிக்கல் பாதுகாப்பு, சுயபாதுகாப்பு கருவிகளை அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் (பயிற்சி) தர்மேந்திரா இயந்திரங்களை பாதுகாப்பாக கையாளும் முறை, தொழிற்சாலை பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஆகிவை குறித்து பேசினார். இதில் துணை இயக்குநர் கே.திவ்யா, தொழிற்சாலையின் உதவி துணைத்தலைவர் சரவணன், முதுநிலை மேலாளர் வெங்கட்ராஜ் மற்றும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை