வடமேற்கு ரயில்வேயில் 54 இடங்கள்

பணி: Sports Person (Sports Quota):
விளையாட்டு வாரியாக காலியிடங்கள் விவரம்:
Basket Ball-15, Athletics- 9, Wrestling-6, Cross Country-4, Cycling-4, Badminton-3, Cricket-3, Volleyball-2, Boxing-2, Shooting-2, Kabaddi-2, Table Tennis-2.
சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்வித்தகுதியுடன் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவில் தேசிய/ மாநில/ பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500/- (எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான கட்டணம் ₹250). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
வயது: 1.1.2024 தேதியின்படி 18 முதல் 25க்குள்.
விண்ணப்பதாரரின் விளையாட்டுத் தகுதி மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 1.4.2021 தேதிக்கு பின்னர் விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வடமேற்கு ரயில்வேக்கு சொந்தமான ரயில்வே அலுவலகங்களில் கிளார்க் மற்றும் டைப்பிஸ்டாக பணியமர்த்தப்படுவர். பணியில் சேர்ந்த 4 வருடத்திற்குள் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் செய்ய தெரிந்தவர்களில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.rrcjaipur.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2023.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி