ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஆந்திராவை சேர்ந்தவர் கைது

பாலக்காடு: பாலக்காட்டில் இருந்து ரயிலில் கடத்தப்பட்ட 28 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார் ஆந்திராவை சேர்ந்தவரை கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பெங்களூரூ எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடமைகளை நேற்று சோதனை மேற்கொண்டனர். பொது பெட்டியில் பயணி ஒருவரின் உள்ளாடைக்குள் கத்தை கத்தையாக மறைத்து 500 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 28 லட்சம் ரூபாய் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

போலீசார் பயணியிடம் நடத்திய விசாரணையில் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் ஹவாலா பணம் என்பதும், அவர், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த கங்குலாராஜூ சுனில்குமார் (42) என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Related posts

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை