செல்போனில் பேசியபடி சென்றதால் ரயிலில் சிக்கிய பெண் பலி


பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், விநாயகம் நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (40). இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்து வேலை விஷயமாக பல்லாவரம் ரயில் நிலையம் வந்தார். அப்போது, செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக வந்த மின்சார ரயில் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மகாலட்சுமி மீது மோதியது. இதில், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மகாலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்