தெற்கு ரயில்வேயில் 2438 அப்ரன்டிஸ்

பயிற்சி: Trade Apprentice (Fresher/Ex-ITI).
மொத்த காலியிடங்கள்: 2438.

பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள்:
1. Fitter/Welder (Gad & Electric)
2. Turner/Machinist
3. Electrician/Electronic Mechanic
4. COPA/Plumber/Carpenter
5. Painter/ Diesel Mechanic
6. Steno/Secretarial Assistant
7. A/C Mechanic/ICTSM
8. MLT (Radiology/Pathology/Cardiology)
9. Wire man/PASAA

Workshop/ Railway Division வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள் விவரம்:
a. Freshers Category:
1. Signal & Telecommunication workshop/Pothanur, Coimbatore- 18.
2. Carriage & Wagon Works/Perabur- 47.
3. Railway Hospital/Perambur (Medical Laboratory Technician) (MLT)- 20.
b. Ex- ITI Category:
4. Signal & Telecommunication Workshop/Pothanur, Coimbatore- 52
5. Thiruvanthapuram Division- 145
6. Pallakad Division- 285
7. Salem Division- 222.
8. Carriage & Wagon Works/Perambur- 350.
9. Loco Works/ Perambur- 228
10. Electrical Workshop/Perambur- 130.
11. Engineering Workshop/Arakonam- 48.
12. Chennai Division/Personnel Branch- 24
13. Chennai Division- Electrical/Rolling Stock/Arakonam- 65
14. Chennai Division-Electrical/Rolling Stock/Avadi- 65
15. Chennai Division-Electrical/Rolling Stock/- Tambaram-55
16. Chennai Division-Electrical/Rolling Stock/- Royapuram- 30
17. Chennai Division- Mechanical (Diesel): 22
18. Chennai Divison- Mechanical (Carriage & Wagon)- 250.
19. Chennai Division- Railway Hospital (Perambur)-3
20. Central Workshops, Ponmalai- 201
21. Trichirapalli Division- 94
22. Madurai Division- 84.

தகுதி:
1. (Ex-ITI): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. Fresher (Non-ITI) பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MLT பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்களுடன் அறிவியல்/கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
Ex ITI பிரிவுக்கு 15 முதல் 24 வயதிற்குள்ளும், Non-ITI பிரிவுக்கு 15 முதல் 22 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு 18.07.2024 தேதியின்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
10ம் வகுப்பு/பிளஸ் 2/ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் Fresher Category எனில் வெல்டர் டிரேடுக்கு 15 மாதங்களும், எம்எல்டி பிரிவுக்கு 15 மாதங்களும், இதர டிரேடுகளுக்கு 2 வருடங்களும் பயிற்சி வழங்கப்படும். உதவித் தொகை ரயில்வே விதிமுறைப்படி வழங்கப்படும்.
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரயில்வே விதிமுறைப்படி இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.காலியிடங்கள் ஏற்பட்டுள்ள இடங்களில் ஏதாவதொரு இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்கவும்.

கட்டணம்: ரூ.100/-.இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2024.

 

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்