ரயில் சக்கர தொழிற்சாலையில் 192 அப்ரன்டிஸ்கள்

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 192.
வயது: 23.02.2024 தேதியின்படி 15 முதல் 24்க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள் வாரியாக காலியிடங்கள்:

1. Fitter: 85 இடங்கள் (பொது-43, ஒபிசி-23, எஸ்சி-13, எஸ்டி-6)
2. Machinist: 31 இடங்கள் (பொது-10, ஒபிசி-8, எஸ்சி-5, எஸ்டி-2)
3. Mechanic (Motor vehicle): 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1).
4. Turner: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)
5. CNC Programming cum Operator (COE Group): 23 இடங்கள் (பொது-12, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-2).
6. Electrician: 18 இடங்கள் (பொது-9, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1)
7. Electronic Mechanic: 22 இடங்கள் (பொது-11, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-2).

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.10,899 முதல் ₹12,261 வரை உதவித் தொகை வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.100/-. இதை இந்தியன் போஸ்டல் ஆர்டராகவோ, டிடியாகவோ செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டிய முகவரி:
The Principal, Financial Advisor, Rail Wheel Factory, Yelahanka.
கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பதாரர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்ய வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.rwf.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.03.2024.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது