ரயில் விபத்துக்கு காரணமான ‘இன்டர்லாக்கிங்’ கோளாறு என்றால் என்ன?

புவனேஸ்வர்: இந்திய ரயில்வேயில் முன்பு ‘ரிலே இன்டர்லாக்கிங்’ முறை தான் செயல்பாட்டில் இருந்தது. தற்போது ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்’ சிக்னல் அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. இது கணினி வாயிலாக மாற்றத்தக்கது. இந்த நவீன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நடந்துள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தெரிவித்தார்.

‘இன்டர்லாக்’ என்பது சமிக்ஞைகள், பாயிண்ட்ஸ், பிற பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. எலக்ட்ரானிக் பேனல் அல்லது நெம்புகோல் சட்டத்தின் மூலம் இயக்கப்படும் முறையாகும். இதன்மூலமே ரயில்கள் செல்வதற்கான பாதைகள் ஒதுக்கப்படுகின்றன. இதன் கட்டுப்பாடு மையமானது, அந்தந்த ஸ்டேசன் மாஸ்டர் கட்டுப்பாட்டில் செயல்படும்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்