ரயில் நேர அட்டவணை டிச.31 வரை நீட்டிப்பு: ஜன.1 புதிய அட்டவணை

புதுடெல்லி: ஒவ்ெவாரு ஆண்டும் ரயில்வே சார்பில் ஜூன் 31ம் தேதி புதிய ரயில்வே அட்டவணை வெளியிடப்படும். அதன் அடிப்படையில் ரயில்கள் இயக்கப்படும். ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை இது அமலில் இருக்கும். இதுதான் பாரம்பரியமாக நடந்து வந்தது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் அட்டவணை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கத்தை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மாற்றி உள்ளது. தற்போதுள்ள அட்டவணை டிசம்பர் 31 வரை நீடிக்கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே வாரியத்திற்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,’ ரயில்களின் நேரம் மற்றும் இயங்கும் நிலையை ரயில்வே வாரியம் ஆய்வு செய்து வருகிறது. இந்த முறை ரயில்வே அட்டவணையை மிகவும் திறமையாக மாற்ற விரும்புகிறது. எனவே புதிய கால அட்டவணையின் வெளியீட்டு தேதி 2025 ஜனவரி 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை பழைய அட்டவணை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27ம் தேதி இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!