ரயிலில் வந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்

 

ஈரோடு, ஏப். 27: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ரயில் மூலம் நேற்று ஈரோட்டிற்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  அதன்படி, ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரயில் நேற்று காலை ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்து. பின்னர் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொதுவிநியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்