எளிதாக வாகனங்கள் செல்லும் வகையில் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு

சென்னை: அண்ணா சாலையில வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் இன்று முதல் சோதனையாக போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா சாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டி கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.

* ஸ்மித் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து வாகன ஓட்டிகள் ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.

* பட்டுல்லாஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை மற்றும் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகன ஓட்டிகள் அண்ணாசாலை செல்லலாம். அண்ணா சாலை மற்றும் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.

* ஜி.பி.சாலை சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஒயிட்ஸ் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் சாலை, ஒயிட்ஸ் சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலையில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

* திரு.வி.க. மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலையில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், ஸ்மித் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அண்ணாசாலை மற்றும் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னி சாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள், இடதுபுறமாக திரும்பி அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ள ’யு’ வளைவில் திரும்பி பின்னி சாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை