டொயோட்டா டைசர்

டொயோட்டா நிறுவனம், டொயோட்டா அர்பன் குரூசராக டைசர் என்ற காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரான்க்ஸ் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இ, எஸ், எஸ் பிளஸ், ஜி மற்றும் வி என 5 வேரியண்ட்கள் உள்ளன . 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியண்டில் இ, எஸ் மற்றும் எஸ் பிளஸ் வேரியண்ட்கள் மட்டும் உள்ளன.

ஷோரூம் துவக்க விலையாக இ வேரியண்ட் சுமார் ரூ.7.74 லட்சம் எனவும், எஸ் பிளஸ் எம்டி வேரியண்ட் சுமார் ரூ.9லட்சம், ஏஎம்டி சுமார் ரூ.9.53 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் வகையில் ஜி மற்றும் வி வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக ஜி வேரியண்ட் எம்டி சுமார் ரூ.10.56 லட்சம், ஏடி ரூ.11.96 லட்சம், வி வேரியண்ட் எம்டி சுமார் ரூ.11.48 லட்சம், ஏடி சுமார் ரூ.12.88 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் சுமார் ரூ.8.72 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டைசர் காரின் தோற்றம் மாருதி சுசூகியின் பிரான்க்ஸ் மாடலை போன்று இருந்தாலும், சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. கிரில், பம்பர்கள், எல்இடி டிஆர் எல்கள், டெயில் லைட்டுகள் ஆகியவை புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ளன. இதுதவிர 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லஸ் சார்ஜர், குரூஸ் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1 லிட்டர் டர்போ பெட்ரோல் 100 பிஎஸ் பவர், 148 என்எம் டார்க், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட் 77.5 பிஎஸ் பவர் மற்றும் 98.5 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி