பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புவனகிரி: கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையம் களை கட்டியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் அலையாத்தி காடுகள் உள்ளது. சுரபுன்னை தாவரங்களை கொண்ட இந்த காடுகளில் படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இதற்காக சுற்றுலாத்துறை சார்பில் படகு இல்லம் உள்ளது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

மேலும் நேற்று வார விடுமுறை என்பதால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் இங்கு வந்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் படகு மற்றும் துடுப்பு படகுகளில் காட்டுப் பகுதிக்கு சென்று அலையாத்தி காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மே மாதம் தொடங்கியதில் இருந்தே பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்