வெயிலுக்கு விடைகொடுக்க படையெடுத்த சுற்றுலாப்பயணிகள் விடுமுறையில் திணறிய கொடைக்கானல்

கொடைக்கானல் : சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் நேற்று குவிந்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதும். தற்போது, சுட்டெரிக்கும் வெயிலால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் தகிக்கின்றன. கொடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, சுற்றுலாப்பயணிகள் விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர்.

மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் ஏராளமான திரண்டிருந்தனர். ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் நேற்று காலை முதல் மாலை வரை இதமான சூழல் நிலவியது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் சீசன் காலத்தில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை ரசித்துச் சென்றனர்.

Related posts

நெல் கொள்முதல்  நிலையக் கட்டடங்கள், கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை

விரைவில் வரவிருக்கும் டெக்ஸ் பார்க் சேலம், நெசவுத் துறையில் பெரிய அளவில் ஊக்கமளிக்கும் :அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்